Renganathapuram

Our School

Kumar Digital Studio     SKVS School     Click For Website Development / Advertisement...


து.ரெங்கநாதபுரம் கிராமத்தை பற்றி.....

து.ரெங்கநாதபுரம் கிராமமானது திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் இதற்க்கு உட்பட்டு துறையூரின் வடக்கு பகுதியில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ரெங்கநாதபுரம் கிராமம் இயற்கை வளம் பொங்கும் கிராமம் ஆகும். வடக்கே கொக்குர் மலை, கிழக்கே பச்சைமலை, மேற்கே கொல்லிமலை என மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டது .

எங்கள் ஊரில் முருகன் குன்றின் மீது அமைந்து மக்களுக்கு அருள் பாலிப்பது இனொரு சிறப்பம்சம் ஆகும். மேலும் சிவன், பெருமாள், முருகன், விநாயகர், மாரியம்மன், கருப்பசாமி , பாப்பாத்தியம்மன்,ஓம் ஆதிபராசக்தி சக்தி அம்மன் போன்ற இஷ்ட தெய்வங்களுக்கு தனி கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.

சிவன் கோவில், பெருமாள் கோவில் ,விநாயகர் கோவில் , மாரியம்மன் கோவில் ,ஆதி பராசக்தி கோவில் ஆகியவை து.ரெங்கநாதபுரம் கிராமத்தில் ஊரின் மேற்கே தென்வடல் வீதியில் ஒரே நேராக அமைந்து இருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

முஸ்லீம் மசூதி புதிதாக கட்டப்பட்டுள்ளது.

தற்காலிக வாழ்கை முறைக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைய பெற்றது இனொரு தனி சிறப்பு ஆகும்.

விவசாயமே இங்கு முதன்மை தொழிலாக உள்ளது.நெல், வெங்காயம், கம்பு, சோளம், உளுந்து, எள், பருத்தி, காய்கறிகள் முதலியவை பயிரிடப்படுகின்றது.

மேலும் கால்நடை வளர்ப்பிலும் எங்கள் கிராமத்தினர் சிறப்பாக விளங்குகின்றனர்.

அரசு பணிகளிலும் தனியார் பணிகளிலும் எங்கள் கிராமத்தினர் அதிகமாக உயர்பதவிகளை வகித்து வருகின்றனர்.

எங்கள் சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக ஆசிரியர்கள் கொண்ட கிராமம் எங்கள் கிராமம்.



Village Map